Monday 10 March 2014

வான்கோள்களின் இயக்க விதிகளைக் கண்டுபிடித்த அற்புத அறிஞர் ஜோகன்னஸ் கெப்ளர் மறைந்த தினம் இன்று நவம்பர் 15: 

ஜெர்மனியில் வெய்ல் டெர் ஸ்டாட் என்னும் நகரில் பிறந்தார். பிரஸ்ஸிய வானியல் வல்லுநராகிய கோப்பர்னிக்கஸ், "கோளங்கள் கதிரவனைச் சுற்றி வருகின்றனவேயன்றி, நிலவுலகைச் சுற்றி வரவில்லை" என்னும் தமது கோட்பாட்டினை விளக்கும் நூலை இவர் பிறப்பதற்கு 28 ஆண்டுகளுக்கு முன்னர்தான் வெளியிட்டிருந்தார்
கெப்ளரின் முதல் நூலைப் படித்த புகழ் பெற்ற வானியல் அறிஞராகிய டைக்கோ பிராகி, பிரேகு நகர் அருகிலிருந்த தமது ஆராய்ச்சிக் கூடத்தில் தமக்கு உதவியாளராக வரும்படி கெப்ளரை அழைத்தார். டைக்கோவின் அழைப்பை ஏற்றுக் கொண்ட கெப்ளர், 1600 ஆம் ஆண்டு ஜனவரியில் அவருக்கு உதவியாளராகச் சேர்ந்தார்.

டைக்கோவின் ஆராய்ச்சிக் குறிப்புக்களை மிகக் கவனமாகக் கணித முறைப்படி பகுப்பாய்வு செய்வதன் மூலமாக இவற்றுள் எந்தக் கொள்கை சரியானது என்பதைத் துல்லியமாக உறுதியிட்டு விடலாம் என்று கெப்ளர் நம்பினார். ஆனால், பல ஆண்டுகள் அரும்பாடுபட்டுக் கணிதக் கணிப்புகள் செய்து பார்த்தபோது டைக்கோவின் ஆராய்ச்சிக் குறிப்புகள் அந்தக் கொள்கைகளில் எதனுடனும் ஒத்திருக்கவில்லை என்பதைக் கண்டு கெப்ளர் மனக்குழப்பமடைந்தார். இறுதியில், சிக்கல் என்ன என்பதைக் கெப்ளர் உணர்ந்து கொண்டார். அவரும், டைக்கோ பிராகி, கோப்பர்னிக்கஸ் போன்ற மரபு வானியலறிஞர்கள் அனைவரையும் போன்றே, கோளங்களின் சுற்றுப் பாதைகள், வட்ட வடிவாக கருதியதை கண்டார் .நீள் வட்ட பாதையில் கோள்கள் சுழல்கின்றன என விளக்கும் மூன்று விதிகளை வகுத்தார் .

.கெப்ளரின் விதிகள், சூரியனைச் சுற்றும் கோளங்களின் இயக்கங்களை முழுமையாகவும், துல்லியமாகவும் விவரித்த தன் மூலமாக கோப்பர்னிக்கஸ், கலிலியோ போன்ற மேதைகளுக்குக் கூடி பிடிபடாமலிருந்த ஓர் அடிப்படையான வானியல் சிக்கலுக்குத் தீர்வு காண முடிந்தது. எனினும், கோளங்கள் ஏன் நீள் வட்டப் பாதையில் சுழல்கின்றன என அவரால் விளக்க முடியவில்லை .நியூட்டன் அதை பின் புவி ஈர்ப்பு விசையின் மூலம் விளக்கினார் .

எந்த நவீன கருவிகளும் இல்லாமல் அசாத்தியமான உழைப்பின் மூலம் துல்லியமான விதிகளை கெப்ளர் . வார்த்தெடுத்தார் ஆனாலும் அவர் கண்டதை கலிலியோ முதலிய அறிஞர்கள் நிராகரித்தார்கள் ."எனக்கு கவலை இல்லை ;என் நூல் ஒரு தெய்வீக பரவசத்தை தருகிறது .இறைவனை உணர 6000 ஆண்டுகள் கழித்து தான் ஒருவர் வருகிறார் என்றால் என் கண்டுப்பிடிப்பை ஏற்றுக்கொள்ள பல காலம் ஆனாலும் வருத்தமில்லை !"என நம்பிக்கை பொங்க சொன்னார் அவர் .
அது தான் நடந்தது .